வடகிழக்கு டெல்லியில் 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு டெல்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாக இருந்த 4 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அச்சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் தெரிவித்த தகவல்களின்படி, "கூலி வேலைக்கு செல்லும் இந்த இரு குடும்பங்களும் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றன. பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உரிய நடைமுறையைப் பின்பற்றி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த 21 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.