சிறுமியிடம் `ஐ லவ் யூ’ என்று கத்திய இளைஞர்... அதிரடி தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம்!

By காமதேனு

13 வயது சிறுமியிடம் 'ஐ லவ் யூ' என்று கத்திக் கூச்சலிட்ட 30 வயது நபருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015-ம் ஆண்டு 13 வயது பள்ளி மாணவியை பதினைந்து நாட்கள் பின்தொடர்ந்து அந்த சிறுமியிடம் ‘ஐ லவ் யூ’ என்று கூறியதற்காக 30 வயது இளைஞருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிபதி ஜெய்ஸ்ரீ ஆர்.புலேட் இந்த குற்றத்திற்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆனால் இவர் வழக்கமான குற்றவாளி இல்லை என்பதால் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மும்பையில் 2015-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த போது 7-ம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் சார்பில் திலக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 15 நாட்களாக அந்த நபர் சிறுமியை பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், பொது இடத்தில் 'ஐ லவ் யூ ' என கத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE