கரும்புத் தோட்டத்தில் 5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்... 2 சிறுவர்களுக்கு போலீஸார் வலைவீச்சு!

By காமதேனு

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ஐந்தரை வயது சிறுமியை இரண்டு சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இரண்டு சிறுவர்களும் அந்த சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று இந்தக் கொடுமையை செய்ததாக போலீஸார் கூறினர்.

திங்கள்கிழமை மாலை பண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாஜ்பாய் தெரிவித்தார். சம்பவத்தன்று மாலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து, நடந்த கொடூரத்தை தன் குடும்பத்தாரிடம் கூறினார். அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 7 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE