சென்னை: மாமல்லபுரம் அருகே பிரபல கூலிப்படைகும்பல் தலைவனான சீர்காழி சத்யாவை கடந்த ஜூன் 28-ம் தேதி போலீஸார்துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.கோவையில் ஒரு வழக்கில் சத்யாவுக்குபிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தப்பியோட முயன்றதால் அவரை போலீஸார் சுட்டுப்பிடித்ததாககூறப்படுகிறது. அப்போது அவரிடமிருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்த சீர்காழி சத்யா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், ரத்த ஓட்ட பாதிப்பு காரணமாக சீர்காழி சத்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்க அனுமதி கோரி அவரது தாயார்தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர்அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறை நிர்வாகம் தரப்பில், சத்யாவின் உடல் நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டது.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், பிடிபட்ட சீர்காழி சத்யாவுக்கு தனியார்மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதியளித்தும், மருத்துவர்களின் அனுமதியுடன் அவரது தாயார் மட்டும்அவரை சந்திக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.