கரும்புத் தோட்டத்தில் இளம்பெண்ணின் அழுகிய சடலம்: உத்தர பிரதேசத்தில் கொடூரம்

By காமதேனு

உத்தர பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்னர் காணாமல்போன இளம்பெண், அழுகிய நிலையில் கரும்புத் தோட்டத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் 18 வயது பெண்ணின் உடல், கரும்புத் தோட்டத்தில் வீசப்பட்டிருந்தாகக் காவல் துறையினருக்குத் தெரியவந்தது. ஜூன் மாதம் 6-ம் தேதி அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பெண்தான் எனத் தெரியவந்தது. செருப்புகள் மற்றும் ஆடையைக் கொண்டு அப்பெண்ணின் தந்தை சடலத்தை அடையாளம் காட்டினார்.

கொலைக்கு முன்னர் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், அடையாளத்தை மறைக்க உடலில் ஆசிட் ஊற்றப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 20 வயதான சந்தோஷ் வர்மா என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE