முன்னாள் எம்எல்ஏவின் பண்ணையில் இருந்து 10 எருமை மாடுகள் திருட்டு

By காமதேனு

பஞ்சாப் முன்னாள் எம்எல்ஏ தர்செம் ஜோதனின் பால் பண்ணையில் இருந்து 10 எருமை மாடுகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாதா நகரில் வசிக்கும் முன்னாள் எம்எல்ஏ தர்செம் ஜோதனின் பண்ணைக்குள் புகுந்த 5 பேர், அங்குள்ள ஊழியர்கள் இருவரைத் தாக்கிவிட்டு, 10 எருமை மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ள ஜோதன், கொள்ளையர்கள் பண்ணையை நன்கு அறிந்தவர்கள் என்றும், அவர்கள் பால் பண்ணையைக் குறிவைப்பதற்கு முன்பு பலமுறை உளவு பார்த்ததாகவும், இதனால் 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை, குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE