காரின் கண்ணாடியை உடைத்து பணம், ஆவணம் திருட்டு: இந்திய வில்வித்தை வீரர் ஷாக்!

By காமதேனு

இந்தியாவின் வில் வித்தை வீரர் அபிஷேக் வர்மாவின் கார் கண்ணாடியை உடைத்து பணம், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்திய வில் வித்தை வீரர் அபிஷேக் வர்மா. இவர் டெல்லியின் ரோகிணி பகுதியில் காரை நேற்று நிறுத்தியிருந்தார். அப்போது காரின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு லேப்டாப், 1 லட்ச ரூபாய், ஆவணங்கள் ஆகியவை திருடப்பட்டன. இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வாகனத்தில் வந்த 7 பேர் காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE