`சிகரெட் வாங்க பத்து ரூபாய் கொடு'- பணம் கொடுக்காதவரை கொலை செய்த வாலிபர்கள்

By காமதேனு

டெல்லியின் ஆனந்த் பர்பட் பகுதியில் சிகரெட் வாங்குவதற்கு 10 ரூபாய் கொடுக்காத நபரை நான்கு பேர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

ஜூன் 6-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தடயவியல் பரிசோதனைக்கு பின் உயிரிழந்த நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல் துறை துணை ஆணையர் ஸ்வேதா சவுகான், "விஜய் என்பவரிடம் அதே பகுதியில் வசிக்கும் சோனு என்பவர் சிகரெட் வாங்குவதற்காக 10 ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் விஜய் பணம் இல்லையென மறுத்ததில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சண்டையில் சோனு மற்றும் அவரது கூட்டாளிகள் விஜய்யை கத்தியால் குத்தியுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மற்றும் இன்பார்மர்கள் உதவியுடன், ரவி, ஜதின், சோனு குமார் மற்றும் அஜய் ஆகிய நான்கு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE