ஓடும் பேருந்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: பிஹாரில் நடந்த கொடுமை

By காமதேனு

பிஹாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தின் பெட்டியா நகரில் சிறுமிக்கு மயக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து, பேருந்தில் ஓட்டுநர் உட்பட மூன்று நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நடந்துள்ளது.

இது தொடர்பாக அந்த சிறுமி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், ஓட்டுநரும் அவனது கூட்டாளியும் தனக்கு மயக்க மாத்திரை அடங்கிய குளிர்பானம் கொடுத்ததாகவும், குளிர்பானத்தை உட்கொண்டு அரைமயக்க நிலையில் இருந்தபோது 3 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பெட்டியா துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி முகுல் பாண்டே, "அந்த பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE