படிக்கும்போதே காதல்... ஆசைவார்த்தை கூறி தனிமை: ஏமாற்றிய வக்கீலை சிறைக்கு தள்ளிய பெண்

By காமதேனு

ஆசைவார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்துவிட்டு ஏமாற்றிய வழக்கறிஞர் மீது பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த முரளி (34) என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர், தன்னுடன் படித்த பெண் வழக்கறிஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணிடம் பல நேரங்களில் தனிமையில் இருந்துள்ளார் முரளி. இந்நிலையில், முரளி அந்த பெண்ணிடம் இருந்து விலக ஆரம்பித்ததோடு, சாதி அடையாளத்தை குறிப்பிட்டு பேசி இழிவுபடுத்தி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனிடையே, வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார் முரளி.

இது பற்றி தகவல் அறிந்த அந்தப் பெண் வழக்கறிஞர், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, வழக்கறிஞர் முரளியை நேற்று கைது செய்ததோடு, 417, 420, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முரளி, சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE