‘நான் ஊதமாட்டேன்… என் டிரைவர் ஊதுவான்’ : போலீஸாருடன் ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞர்!

By காமதேனு

சென்னையில் வாகனத்தணிக்கை செய்த போலீஸாரிடம் வழக்கறிஞர்கள் சிலர் வாக்குவாதம் செய்யும் காட்சி வைரலாகி வருகிறது.

சென்னை காமராஜர் சாலையில் நள்ளிரவில் போக்குவரத்து போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த வழக்கறிஞர்களை போலீஸார் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர்கள், மது அருந்தியிருக்கிறார்களா என போலீஸார் சோதனை செய்தனர். வாகனம் ஒட்டி வந்த வழக்கறிஞரிடம் ப்ரீத் அனலைசர் கருவியில் போக்குவரத்து போலீஸார் ஊதச் சொல்லியுள்ளனர்.

ஆனால், ப்ரீத் அனலைசர் கருவியில் ஊத முடியாது. என் டிரைவர் வந்து ஊதுவான் என அந்த வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE