டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை: நடைப்பயிற்சி சென்றபோது நடந்த கொடூரம்

By காமதேனு

டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீன் பட் (35) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிக்டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இதனால் பிரபலமாக இருந்து வந்த அம்ரீன், நேற்று மாலை தனது வீட்டுக்கு முன்பு இருந்த தோட்டத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த இரண்டு தீவிரவாதிகள், அம்ரீன் பட்டை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது சகோதரர் மகன் ஃபர்ஹான் சுபைர் (10) மீதும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த ஃபர்ஹான் சுபைர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE