சென்னையில் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிந்தாரிப்பேட்டை சாமி நாயக்கர் தெரு அருகே நேற்று இரவு பாஜக நிர்வாகி பாலச்சந்தர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையான பாலச்சந்தர் மீது இரண்டு கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தொழில்போட்டி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரதீப் மீது 10க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலச்சந்தரை படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழந்த பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் அவர் அதை தவிர்த்து தனியே சென்ற போது இக்கொலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாலமுருகன் அஜாக்கிரதையாக இருந்த காரணங்களுக்காக அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.