கைகளை கட்டி தலைமுடி அறுப்பு... சென்னையில் பெண்ணுக்கு நடந்த துயரம்: அதிர்ச்சி வீடியோ

By காமதேனு

சென்னையில் ஒரு பெண்ணின் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் அவரை தாக்கி தலைமுடியை அறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வீட்டிற்குள் ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்கள் உள்ளனர். பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை அந்த நபர் ஆபாசமாக திட்டி எட்டி உதைக்கிறார். பின்னர் அந்த பெண்ணின் தலைமுடியை கத்திரிக்கோலால் வெட்ட முயன்ற போது கத்திக்கோல் சரியா வெட்டாததால் உடனே அறுவா மனையை கொண்டு வந்து அந்த பெண்ணிடம் பேசியபடியே தலைமுடியை அறுக்கும் காட்சி பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இது குறித்து காவல் துறையினர் நடத்தி விசாரணையில், கைகள் கட்டப்பட்ட பெண் பானு என்பதும், முடியை அறுக்கும் நபர் கார்த்தி என்பதும் தெரியவந்தது. இரண்டு பேரும் இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்டதும், இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் பானு தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பானுவை தேடி கண்டுபிடித்து அவரை அழைத்து வந்த கார்த்திக் கைகளை கட்டிப்போட்டு தலை முடியை வெட்டுவதும் தெரியவந்தது. மேலும் பானுவை கம்பியால் தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சில மாதங்களாக வடபழனியில் வசித்து வந்த இவர்கள் தற்போது வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE