டிக்கெட் கேட்ட நடத்துநர்... எட்டி மிதித்த போலீஸ்காரர்: பேருந்தில் நடந்த களேபரம்!

By காமதேனு

உத்தரப்பிரதேசத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துநரை தலைமை காவலர் ஓங்கி மிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் ஏறிய போலீஸ்காரரிடம் நடத்துநர் டிக்கெட் எடுக்கச் சொல்லியுள்ளார். ஆனால், அவர் டிக்கெட் எடுக்கவில்லை. படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வந்த போலீஸ்காரரிடம் பேருந்து நின்றதும் நடத்துநர் மீண்டும் டிக்கெட் எடுக்கச் சொல்லியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் நடத்துநரை ஓங்கி மிதித்தார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடத்துநரை ஓங்கி மிதித்தவர் புவனேஷ்பாபு என்ற தலைமை காவலர் ஆவார். இச்சம்பவத்தை அடுத்து அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேற்கு கான்பூர் காவல்துறை அதிகாரி மூர்த்தி கூறியுள்ளார்.

VIEW COMMENTS