‘என் தோழியுடன் ஏன் பேசுகிறாய்?’ - சக மாணவரைக் கத்தியால் குத்தியவர் மீது வழக்கு

By காமதேனு

தெலங்கானாவில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவர், தன் தோழியுடன் பேசிய காரணத்துக்காக சக மாணவரைக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானாவின் ரெங்கா ரெட்டி மாவட்டத்தின் ராஜேந்திரநகர் பகுதியைச் சேர்ந்தவர் துர்கா பிரசாத். ப்ளஸ் 2 மாணவரான துர்கா பிரசாத், தனது வகுப்புத் தோழியுடன் நட்புடன் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த மற்றொரு மாணவர் அவர் மீது கோபம் கொண்டார். அந்த மாணவர் அந்தப் பெண்ணைக் காதலித்துவந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், துர்கா பிரசாதை ராஜேந்திரநகர் பகுதிக்கு வரவழைத்த அந்த மாணவர், அவரைக் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த துர்கா பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தகவலறிந்த பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார், அந்த மாணவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE