திண்டுக்கல் வீட்டில் திருட வந்த திருடனை அமெரிக்காவிலிருந்து எச்சரித்து ஓடவிட்டிருக்கிறார் லீனஸ் என்ற வழக்கறிஞர். நவீன தொழில் நுட்ப வசதிகளால் ஆரம்பத்திலேயே திருட்டு தவிர்க்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் எம்.வி.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் லீனஸ். அமெரிக்காவில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக, தனது மனைவியுடன் 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார் லீனஸ். அதற்கு முன்பாக தனது வீட்டைச் சுற்றிலும் நவீன பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். நவீன கண்காணிப்பு கேமரா, ஒலி பெருக்கி, மைக், அலாரம் என அனைத்து கண்காணிப்பு வசதிகளையும் வீட்டில் பொருத்தி இருந்தார். தன்னுடைய செல்போன் மூலம் மின்விளக்குகள், மின்மோட்டார்கள் ஆகியவற்றை அமெரிக்காவிலிருந்தே இயக்கும் வசதிகளையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்.
“வீட்டில் பணமோ, விலை உயர்ந்த பொருட்களோ இல்லை. வீடு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே உள்ளே செல்லும் முயற்சியைக் கைவிடுங்கள்’ என எச்சரிக்கை விடுத்தார். வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட அந்த மர்ம நபர், லீனஸ் எச்சரிப்பை அலட்சியப்படுத்தி வீட்டின் பூட்டை உடைக்க முயன்றார். இதையடுத்து உடனடியாக வீட்டிலுள்ள மின்விளக்குகள் மற்றும் அலாரம் ஆகியவற்றைத் தனது செல்போன் மூலமே இயக்கிய லீனஸ், திண்டுக்கல் (மேற்கு) காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தார். அலாரம் அடிக்கத் தொடங்கியதால் அந்த வீட்டுக்குள் செல்லாமல் தயங்கியபடி நின்ற திருடனிடம், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லீனஸ் கூறினார். இதையடுத்து அங்கிருந்து அந்த மர்ம நபர் ஓட்டம் பிடித்திருக்கிறார்.