வனப்பகுதியில் எஸ்ஐ உள்பட 3 காவலர்கள் வேட்டைக்காரர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரோன் காவல்நிலையத்திற்குட்பட்ட வனப்பகுதியில் 'பிளாக்பக்ஸ்' என்ற அரிய வகை மான்கள் உள்ளன. இவற்றை சில வேட்டைக்காரர்கள் இன்று அதிகாலை வேட்டையாடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் மீது வேட்டைக்கார்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் ஜாதவ், தலைமை காவலர் சாந்த்குமார் மீனா, காவலர் நீரஜ் பார்கவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காவல்துறை வாகனத்தின் ஓட்டுநரும் காயமடைந்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸாருக்கு, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அஞ்சலி தெரிவித்துள்ளார். அத்துடன் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.