காதலனுடன் வெளியேறிய வளர்ப்பு மகள்: வெட்டிக் கொல்லப்பட்ட முதியவர்

By காமதேனு

வீட்டிலிருந்த முதியவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு மகளே கொலை செய்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

மதுரை தல்லாகுளம் கமலா 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணாராம்- பங்கஜவள்ளி தம்பதியினர். தனது வளர்ப்பு மகளான நிவேதாவுடன் வசித்து வந்தனர். சில தினங்களுக்கு முன் வளர்ப்புத் தந்தையான கிருஷ்ணாராமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டதாகவும் இதனால், நிவேதா தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டிலிருந்த முதியவர் கிருஷ்ணாராமமை மர்ம நபர்கள் வீடு புகுந்து இன்று காலை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தல்லாகுளம் சரக உதவி ஆணையர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ப்பு மகளே இவரைக் கொலை செய்துள்ளாரா? அல்லது வேறு யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE