`உன் கணவருக்கு வீடியோவை அனுப்பி விடுவேன்'- மிரட்டிய வாலிபர்: அதிரடி காட்டிய ஆசிரியை

By காமதேனு

``தன்னுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை உன் கணவருக்கு அனுப்பிவிடுவேன்'' என்று மிரட்டல் விடுத்து வந்த பள்ளி தாளாரின் மகனை காவல் துறையில் சிக்க வைத்துள்ளார் ஆசிரியை ஒருவர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முபாரக் (25). இவரது தந்தை புருணை நாட்டில் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கூடத்தில் கோயம்புத்தூர், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்தன் என்பவரின் மனைவி சாந்தா (42) பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி தாளாளரின் மகன் முபாரக்கிற்கும், ஆசிரியை சாந்தாவிற்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது, சாந்தாவிற்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார் முபாரக்.

இதனிடையே, வீடியோவைக் காட்டி சாந்தாவை மிரட்டி பணம் பறித்து வந்துள்ள முபாரக், ஒரு கட்டத்தில் தனது நண்பர்கள் வல்லம் தேவாரம் நகரை சேர்ந்த தினேஷ் (30), மின்நகரை சேர்ந்த மற்றொரு தினேஷ் (26) ஆகியோர் வங்கிக்கணக்கில் பணம் போடச் சொல்லி மிரட்டியுள்ளார். அந்த வகையில் நவம்பர் மாதம் வரை ரூ.40 ஆயிரத்தை சாந்தா முபாரக் நண்பர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி உள்ளார். இருப்பினும் தொடர்ந்து சந்தாவை மிரட்டி வந்துள்ளார் முபாரக். மேலும், நாம் இருவரும் நெருக்கமாக உள்ள வீடியோவை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன் என்றும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார்.

இதனால், வேதனையில் இருந்த சாந்தா ஒரு கட்டத்தில் துணிந்து வல்லம் காவல் துறையில் முபாரக் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முபாரக், தினேஷ், மற்றொரு தினேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE