காட்டிக்கொடுத்த ரத்தக்கறை: தம்பியை கொன்ற அண்ணனை சிக்க வைத்த தங்கை

By காமதேனு

விபத்தில் தம்பி உயிரிழந்திருக்கலாம் என்று நினைத்து அடக்கம் செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருந்த ரத்தக்கறையை வைத்து அண்ணனை சிக்க வைத்துள்ளார் சகோதரி. இந்த கொடுமையான சம்பவம் ராஜபாளையத்தில் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள அருள்புதூரைச் சேர்ந்தவர் மேரி (40). இவரது தம்பி பாக்யராஜ் (38). இவர் கடந்த 30-ம் தேதி தலையில் காயங்களுடன் ரோட்டில் இறந்து கிடந்தார். விபத்தில் பாக்யராஜ் இறந்து இருக்கலாம் என கருதி உறவினர்கள் அவரது உடலை மீட்டு இறுதிச்சடங்கு செய்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று 3-ம்நாள் சடங்கு நிகழ்ச்சிக்காக வீடு சுத்தம் செய்யப்பட்டது. அப்போது வீட்டில் ரத்தக்கறையை துடைக்க அடையாளங்கள் தென்பட்டன. அதிர்ச்சி அடைந்த மேரி இதுதொடர்பாக தளவாய்புரம் போலீஸில் புகார் செய்துள்ளார்.

அதில், எனது தம்பி பாக்யராஜ் சாவில் சந்தேகம் உள்ளது. மூத்த சகோதரர் அந்தோணிராஜிக்கும், தம்பி பாக்யராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே பாக்யராஜ் மரணத்தில் அந்தோணிராஜிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்தபுகாரின் அடிப்படையில் தளவாய்புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, பாக்யராஜ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தோணிராஜை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சொத்து பிரச்சினைக்காக தம்பியை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE