உயிரை மாய்த்த தம்பி.. வேதனையில் தற்கொலை செய்து கொண்ட அண்ணன்: சென்னையில் நடந்த சோகம்

By காமதேனு

அம்பத்தூரில் தம்பி இறந்த துக்கம் தாளாமல் அண்ணணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன்கள் சேட்டு, சுரேஷ். இதில் சுரேஷ் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு சுரேஷ் அடிமையானதால் அவரது கல்லீரல் பாதிப்படைந்தது. இதற்காக அவர் மூன்று ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவர் வயிறு வலியால் துடித்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத போது சுரேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தம்பி உயிரிழந்ததால் வேதனையடைந்த அவரது அண்ணன் சேட்டுவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணனும், தம்பியும் ஒரே நாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE