மனைவியுடன் விவாகரத்து.. பல பெண்களுடன் தொடர்பு : கொடூரமாக கொல்லப்பட்ட டிரைவர்!

By காமதேனு

சேலம் மாவட்டத்தில் தனியார் பஸ் ஓட்டுநர், சம்மட்டியால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த பாலவாடியைச் சேர்ந்தவர் பொன்குமார் (33). இவர் தனியார் பள்ளி பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் விவாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் பாலவாடியிலுள்ள வீட்டில் இன்று பொன்குமார் படுத்திருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பொன்குமாரின் தலையில் சம்மட்டியால் தாக்கினர். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து அறித்த அக்கம்பக்கத்தினர் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பொன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், " கொலையான பொன்குமார் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டவர். மேலும் இவர் பல பெண்களிடம் முறையற்ற உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை கள்ளக்காதல் காரணமாக நடந்ததா அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர். சம்மட்டியால் அடித்து பஸ் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொளத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE