குழந்தைகள் கண்முன்னே கொல்லப்பட்ட தாய் : தாய்மாமன் வெறிச்செயல்

By காமதேனு

குழந்தைகளின் கண்முன்னே அவரது தாயை வெட்டிக் கொலை செய்த தாய்மாமனை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வர்க்கலா பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ். இவரது மனைவி ஷாலு(37). இவர்களுக்கு 9 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சஜீவ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்கள் வீட்டின் அருகிலேயே ஷாலுவின் தாய்மாமன் அனில் வசிக்கிறார். ஷாலு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி வேலை முடிந்து டூவீலரில் ஷாலு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே அவரை குழந்தைகள் கண்முன்னே ஷாலுவை அனில் கத்தியால் சரமாரியாக வெட்டினார். அதைத்தடுக்க வந்தவர்களையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து பொதுக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அனிலை கைது செய்து ஷாலுவை வர்க்கலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் நிலைமை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலன்றி நேற்று இரவு மரணமடைந்தார்.

இதையடுத்து அனில் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், வெல்டரான அனில் கோவாவில் பணிபுரிந்துள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊர் திரும்பியுள்ளார். கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ஷாலுவை அவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகளின் கண், முன்னே தாய் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் வர்க்கலா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE