வீட்டிற்குள் பாய்ந்த குண்டு... உயிர் தப்பிய பெயின்டர் - சிஆர்பிஎஃப் வீரர்கள் பயிற்சியின் போது விபரீதம்!

By ரஜினி

ஆவடியில் சிஆர்பிஎப் வீரர்கள் பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு ஒன்று அருகில் இருந்த வீட்டின் ஓட்டை துளைத்து வீட்டிற்குள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த மிட்டனமல்லி ராஜா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(45). பெயின்டராக வேலை பார்த்து வரும் ராஜேஷ் நேற்று இரவு பணி முடித்து வந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ கண்ணாடி உடைந்து சிமெண்ட் ஓடு துளை ஏற்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ராஜேஷ் குமார்

பின்னர் எதனால் வீட்டில் ஓட்டை ஏற்பட்டது என யோசித்தபடி வீட்டை சுற்றி பார்த்துள்ளார். அப்போது அங்கு துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

இதனை தொடர்ந்து முத்தாப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கி குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் அருகில் சிஆர்பிஎப் பயிற்சி வளாகம், இந்திய விமானப் படையும் இருப்பதால் அங்கு பயிற்சி மேற்கொள்ளும் போது துப்பாக்கி குண்டு வந்து விழுந்திருக்கலாம் அல்லது சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு விழுந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE