வாயில் ஆசிட் ஊற்றி மனைவியை கொன்ற கணவன்: வரதட்சணையால் நடந்த கொடூரம்

By காமதேனு

வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவன், வலுக்கட்டாயமாக கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை மனைவியின் வாயில் ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் தண்டா பகுதியை சேர்ந்தவர் தருண் (34). இவருக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி (30) என்பருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாள் முதல் அதிக வரதட்சணை கேட்டு கணவரும், அவரது குடும்பத்தினரும் கல்யாணியை கொடுமை செய்து வந்துள்ளனர். இதனிடையே, மூன்று மாதங்களுக்கு முன்பு கல்யாணி கர்ப்பம் தரித்திருக்கிறார். இருந்தபோதிலும், அவரிடம் வரதட்சணை கேட்டு கணவர் தருண் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கல்யாணியை சரமாரியாக தாக்கிய தருண், கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை மனைவியின் வாயில் ஊற்றியுள்ளார். வலியால் மனைவி அலறித் துடிக்க தொடங்கியதும் அங்கிருந்து தருண் தப்பியோடிவிட்டார்.

இதனிடையே, கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக கல்யாணியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து தருணை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE