17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த 12 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த 17 வயது சிறுமி ரம்யா (பெயர் மாற்றம்) திடீரென கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தஞ்சாவூர் மகளிர் காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனுடன் நட்பாக பழகினேன் என்றும் பின்னர் இருவரும் நெருக்கமாக இருந்தோம் என்றும் இதில் நான் கர்ப்பம் அடைந்தேன் என்றும் சிறுமி கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், 12 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
17 வயது சிறுமியை 12 வயது சிறுவன் கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த சம்பவம் தஞ்சாவூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.