விஷவாயு தாக்கி சென்னையில் மூவர் பலி

By காமதேனு

சென்னையில் தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்த போது திடீரென விஷவாயு தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் சிவசக்தி நகரில் ஒரு வீட்டில் தரைத்தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அந்த தொட்டியில் விஷவாயு வெளியேறியதில் பிரதீப்குமார், பிரேம்குமார், பிரமோத் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சாருநாதன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறி்த்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE