போலீசை மிரட்டிய திமுக நிர்வாகி: துரைமுருகன் எடுத்த அதிரடி

By காமதேனு

இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை மிரட்டிய திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக கூறி கவுன்சிலரின் கணவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார் பொதுச் செயலாளர் துரைமுருகன்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் காவலர்கள் மணிவண்ணன், தியாகராஜன் ஆகியோர் கடந்த 29-ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டனர். அப்போது திமுகவை சேர்ந்த 51-வார்டு கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன், சென்னை வடக்கு மாவட்டம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் மாவட்ட செயலாளர் மற்றும் நண்பர்கள், அங்குள்ள ஜே.பி.கோயில் தெருவில் நின்று கொண்டிருந்தனர்.

திமுக பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன்

அப்போது, அங்கு வந்த காவல்துறையினர், இந்த நேரத்தில் ஏன் இங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், காவலர்களை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். மேலும், ஜெகதீசன் என்பவர் தான்தான் கவுன்சிலர் என்று கூறி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் காவல்துறையினரை மிரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாது.

இந்நிலையில், கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் மற்றும் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டதாகவும் கூறி, பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE