கன்னியாகுமரி மாவட்டத்தில், மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு பகிதியைச் சேர்ந்தவர் ஜோஸ் கான்பியா(40) வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா(33). இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உண்டு. அண்மையில் வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வந்தவருக்கு வனஜாவின் நடவடிக்கையில் சந்தேகம் தெரிந்தது. ஒருகட்டத்தில் அந்த சந்தேகக்கோடு, இவர்கள் வாழ்க்கையில் சந்தோஷக் கேட்டினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாக இவர்களது வீடு திறக்கப்படவில்லை.
அதன்பின்பு குழந்தைகளின் சத்தமும் உள்ளே இருந்து கேட்டது. ஜோஸ் கான்பியா, தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இரு குழந்தைகளையும் வேறு ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, தன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். தொடர்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கோட்டாறு காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். தாயும், தந்தையும் இறந்த நிலையில் அவர்களது இருகுழந்தைகளும் நிர்க்கதியாக நின்ற காட்சி காண்போரை கண்கலங்கை வைத்தது.