துணை நடிகையை மிரட்டி வீடியோ எடுத்த கும்பல்

By காமதேனு

வீட்டில் புகுந்து கத்தி முனையில் துணை நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து நகை, பணம், பறித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கத்தில் 35 வயதுடைய சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். கணவனை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக துணை நடிகை தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்றிரவு துணை நடிகை வீட்டில் தனியாக இருந்தபோது கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, கதவை திறந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத இருவர் திடீரென வீட்டிற்கு புகுந்துள்ளனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி துணை நடிகை அணிந்திருந்த 6 கிராம் செயின், 4 கம்மலை பறித்து கொண்டதோடு, வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணத்தை திருடி கொண்டனர்.

பின்னர், கத்தி முனையில் துணை நடிகையின் ஆடைகளை அகற்ற சொல்லி அதனை தங்களது செல்போனில் ஆபாச வீடியோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து, துணை நடிகை உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அப்போது, இரவு பணியில் இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துணை நடிகையிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் துணை நடிகர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரம் தனியாக இருந்த துணை நடிகை வீட்டில் புகுந்து கத்திமுனையில் அவரை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE