சகவீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்ற வீரர்: பஞ்சாப் முகாமில் அதிர்ச்சி

By காமதேனு

எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேரை சகவீரர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை ஒட்டிய காசா பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரின் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர், சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டினார். இதில் 5 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் குருநானக் தேவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். எல்லைப்பாதுகாப்பு படை வீரர் சட்டெப்பா நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உண்மையை கண்டறிவதற்காக முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE