சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்குப்பதிவு

By காமதேனு

பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்தவர் ஜெயசீலா (37). இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள், ஜெயசீலாவை திட்டி, தாக்கி கோயிலை விட்டு வெளியேற்றினர்.

இதுகுறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE