ஒட்டன்சத்திரத்தில் டாக்டரையும், அவரது குடும்பத்தினரையும் கட்டிப்போட்டு ரூ.25 லட்சம் ரொக்கப் பணம், 275 பவுன் நகை, காரை திருடிச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருவபவர் சக்திவேல். அவருடைய மனைவி ராணி. இவர்கள் நேற்றிரவு தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல் கத்தியை காட்டி டாக்டர் சக்திவேல் உள்பட 4 பேரை கட்டிப்போட்டது. இதன் பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 25 லட்சம் ரொக்கப் பணம், 275 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பல், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டாக்டரின் காரையும் திருடிச் சென்றது.
இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளை கும்பலா? அல்லது உள்ளூர் நபர்களா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.