போதையில் வந்த கணவர்... வீட்டை எழுதிக்கேட்ட மனைவி... கடைசியில் நடந்த விபரீதம்

By காமதேனு

தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவரிடம், வீட்டை தன்னுடைய பெயரில் எழுதி கேட்டுள்ளார் மனைவி. ஆத்திரத்தில் மனைவியை கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இந்த கொடுமையான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

புதுவண்ணாரப்பேட்டையில் தனது மனைவி சண்முகப்பிரியாவுடன் வசித்து வந்தார் தளபதி. கப்பல் தொழிலாளியான தளபதி, கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு மனைவி, மகன்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் வீட்டை தன் பெயரில் எழுதி தருமாறு கேட்டு கணவரிடம் கேட்டு வந்துள்ளார் மனைவி சண்முகப்பிரியா.

வழக்கம் போல் நேற்றும் மது அருந்திவிட்டு வந்த கணவரிடம் அதுகுறித்து கேட்கவே, ஆத்திரம் அடைந்த தளபதி, சமையல் அறையில் இருந்த கத்தியை கொண்டு சண்முகப்பிரியாவை சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர், காவல் நிலையத்தில் சரணடைத்திருக்கிறார் தளபதி. ரத்த வெள்ளத்தில் கிடந்த சண்முகப்பிரியாவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா உயிரிழந்தார். இதையடுத்து, தளபதி மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE