பேஸ்புக்கில் அவதூறு கருத்து- சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

By காமதேனு

பேஸ்புக்கில் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட சென்னை பூக்கடை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சேகரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சேகர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.5 ஆயிரம் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டிருந்தார்..இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த பேஸ்புக் ஐடி வைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து பூக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகரிடம் அதிகாரிகள் துறைரீதியிலான விசாரணை நடத்தியதில் அந்த பேஸ்புக் ஐடி போலி என சேகர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் தகவல் உதவி ஆய்வாளர் சேகருக்கு முன்பே தெரிந்திருந்தும் அவர் இது குறித்து எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது துறைரீதியிலான விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் சேகரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE