ஓடும் ரயிலில் பெண்ணிடம் 11.5 பவுன் நகை பறிப்பு

By காமதேனு டீம்

சென்னை அருகே, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (46). இவர், கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக, 3 குழந்தைகளுடன் திருவொற்றியூரில் இருந்து மின்சார ரயிலில் சென்றார்.

திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டபோது, 2 வாலிபர்கள் திடீரென ரயிலுக்குள் ஏறி விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 11.5 பவுன் நகைகளைப் பறித்தனர். அடுத்த நொடியே ஓடும் ரயிலிலிருந்து குதித்து தப்பி ஓடினர். நகையைப் பறிகொடுத்த விஜயலட்சுமி, உடனே கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 வாலிபர்கள் சங்கிலிகளைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய திருவெற்றியூர் ராஜாஜி நகர் நேரு தெருவைச் சேர்ந்த தினேஷ் என்கிற கிளி (19), மண்டை தினேஷ் என்கிற தினேஷ் ஆகியோரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 11.5 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE