குழந்தைகளைக் குறிவைக்கும் பீடோஃபைல் மூளைகள்

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்

நாளொரு புகாரும் பொழுதொரு சர்ச்சையுமாக இந்தியாவில் ‘மீ டூ’ இயக்கம் வீச்சு கண்டு வருகிறது. ஆனால் இந்த எழுச்சியில், பெரும்பாலும் பிரபலங்களின் விவகாரங்களே அலசப்படுகின்றன. சாமானியர்களின் குரல்கள் செவிமடுக்கப்படவில்லை. குறிப்பாக, பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் குழந்தைகளின் அழுகுரல்கள் ‘மீ டூ’ களத்தில் யார் காதிலும் விழவில்லை!

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் 53 சதவீத குழந்தைகள் இந்தப் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். பாலியல் இச்சைக்குக் குழந்தைகள் இரையாகும் பரிதாபத்தைத் தடுக்க இந்தியாவில் 2012 வரை பிரத்யேகச் சட்டம் எதுவும் கிடையாது. ‘போக்சோ’ (POCSO-Protection of Children from Sexual Offences Act) சட்டம் நடைமுறைக்கு வந்தும், குழந்தை
களைக் காப்பாற்றும் பிரயத்தனங்கள் முழுமை அடையவில்லை. இந்தச் சட்ட நடவடிக்கைகளுக்கு, குழந்தைகளைக் குறிவைத்து சீரழிக்கும் ‘பீடோஃபைல்’(Pedophile) எனும் விநோதப் பிறவிகள் பெரும் சவாலாய் நிற்கிறார்கள். அவர்களது மூளையின் செயல்பாட்டில் தொடங்கி, முன்வைக்கும் ஒவ்வொரு  நகர்விலும் நம் குழந்தைக்கான ஆபத்து ஒளிந்திருக்கும். யாரந்த பீடோஃபைல்கள், எப்படி இவர்கள் உருவாகிறார்கள், அப்படியென்ன அவர்களுக்கு உளவியல் சிக்கல், அவர்களிடமிருந்து நம் குழந்தைகளைக் காக்க என்ன செய்யலாம்? அனைத்தையும் பார்த்து விடலாம்.

யாரிந்த பீடோஃபைல்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE