கடலூர் - சிறுபாக்கம் அருகே சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த லாரி

By ந.முருகவேல்

கடலூர்: சிறுபாக்கத்தை அடுத்த மாங்குளம் ஊராட்சியில் இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரி இன்று சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தீயில் கருகியது.

கடலூரில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சிறு பாக்கம் அடுத்த மாங்குளம் ஊராட்சி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக ஓட்டநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர மின் கம்பம் ஒன்றில் அதிவேகமாக மோதி, வாய்க்காலில் கவிழ்ந்துள்ளது. இதில் இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற அந்த லாரியானது தீப்பிடித்து எரியத் துவங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினருடன் வந்த சிரறுபாக்கம் போலீஸார், ஓட்டுநர் சிறு காயங்களுடன் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்களால் தண்ணீரை பீச்சி அடித்து தீ யை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அந்த லாரியானது முற்றிலுமாக தீயில் கருகி சேதமானது. இந்த தீ விபத்தால் விருத்தாசலம் - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தற்போது சிறுப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE