எங்கிருந்து வருகிறார்கள் சங்கிலிக் கொள்ளையர்கள்?

By காமதேனு

பவேரியா கொள்ளையர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. வீடு புகுந்து கொள்ளையடிக்கும்போது வீட்டிலிருப்பவர்கள் எதிர்ப்பு காட்டாமலிருந்தாலும்கூட இறுதியாகக் கிளம்பும்போது நடுமண்டையில் இரும்பு உருளையால் ஓங்கி அடித்துவிட்டுக் கிளம்புவார்கள். ஒரே அடியில் உயிர் போய்விடும்.

இதை அவர்கள் காளிக்குக் கொடுக்கும் உயிர்ப் பலியாக கருதுகிறார்கள். தமிழகத்திலிருந்து பவேரியாக்கள் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் இன்று சென்னையில் திரியும் சங்கிலிப் பறிப்புக் கொள்ளையர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர்களுக்கும் இவர்களுக்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை என்றே தோன்றுகிறது!

சென்னையில் ஆந்திர இளம்பெண் இப்படிதான் இரும்புத் தடியால் கொடூரமாக தாக்கப்பட்டார். அதற்கு சில நாட்கள் முன்னதாக வில்லிவாக்கத்தில் இதே பாணியில் ஒரு பெண்ணைத் தாக்கி சங்கிலியைப் பறித்திருக்கிறார்கள். வெளியே வந்தது கொஞ்சம். வெளிவராத சம்பவங்கள் நிறைய.  தற்போது சந்தேகத்தின்பேரில் சிலரை மட்டும் பிடித்திருக்கிறார்கள். உண்மைக் குற்றவாளிகள் பிடிபடவில்லை. அநேகமாகப் பணம் தீர்ந்தவுடன் அவர்கள் அடுத்தத் தாக்குதலுக்குத் தயாராகலாம்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE