ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி செப்.25-ல் நேரில் ஆஜராக உத்தரவு

By KU BUREAU

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

இவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, பரஸ்பர விவாகரத்து கோரிய மனுவை, செப்.25-க்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE