சூர்யா படத்துக்காக ஈசிஆரில் திருவிழா செட்!

By KU BUREAU

நடிகர் சூர்யா, இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 45-வது படமான இதில், த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். காமெடி கலந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்காக சென்னை ஈசிஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரம்மாண்ட திருவிழா செட், பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு பாடல் காட்சியை படமாக்க இருக்கின்றனர். அதில் சூர்யா - த்ரிஷாவுடன் இணைந்து சுமார் 500 நடனக் கலைஞர்கள் நடனமாட உள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE