சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘புஷ்பா: தி ரெய்ஸ்’. தேவி பிரசாத் இசை அமைத்த இந்தப் படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படமும் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியான இந்தப் படத்தை அடுத்து இதன் 2 -ஆம் பாகம் ‘புஷ்பா: தி ரூல்’ என்ற பெயரில் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.
இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.1871 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் அடுத்த பாகமான ‘புஷ்பா 3- த ராம்பேஜ்’ எப்போது உருவாகும் என்பதைப் படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார். “இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், அட்லீ இயக்கும் படங்களில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார். அதை முடித்துவிட்டு வந்ததும் ‘புஷ்பா 3’ படம் தொடங்கும். 2028-ம் ஆண்டு அதை வெளியிட இருக்கிறோம்” என்றார்.