ஜீ5 தளத்தில் வெளியாகிறது ‘செருப்புகள் ஜாக்கிரதை’!

By KU BUREAU

நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகியுள்ள வெப் தொடர், ‘செருப்புகள் ஜாக்கிரதை’. இதில் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், சபிதா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எஸ்எஸ் குரூப் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த வெப் தொடருக்கு, கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.முத்துகணேஷ் இசை அமைத்துள்ளார். எழிச்சூர் அரவிந்தன் வசனம் எழுதியுள்ளார். வைர வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். அதிகாரிகளின் ரெய்டுக்கு பயந்து, அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் கொடுக்கிறார். அவரும் அவரது மகன் இளங்கோவும் செருப்பைத் தொலைத்து விடுகிறார்கள். அதைத் தேடி அலையும் பயணம்தான் கதை. இந்த வெப் தொடர், வரும் 28-ம் தேதி, ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE