‘காளிதாஸ் 2’ வழக்கமான த்ரில்லர் படமல்ல: இயக்குநர் தகவல்

By KU BUREAU

பரத் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றப் படம், ‘காளிதாஸ்’. இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘காளிதாஸ் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்தில் இதையும் இயக்கியுள்ளார்.

இதில், பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், கிஷோர், சுரேஷ் மேனன், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பூவே உனக்காக' சங்கீதா, இதில் அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு, செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஃபைவ் ஸ்டார் செந்தில் தனது ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

படம் பற்றி இயக்குநர் ஸ்ரீ செந்தில் கூறும்போது, “முதல் பாகத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்காது. இது த்ரில்லர் கதை என்றாலும் புலனாய்வு த்ரில்லர் படங்களில் இருக்கும் வழக்கமான விஷயங்கள் இதில் இருக்காது. இறுதியில் குடும்ப எமோஷனல் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இரண்டு வெவ்வேறு கதைகள் ஒரு இடத்தில் சந்திப்பது போல திரைக்கதை இருக்கும். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கோடையில் வெளியிட இருக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE