புதுமுகம் எம். நாகரத்தினம் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘வள்ளிமலை வேலன்’. நாயகியாக இலக்கியா நடித்துள்ளார். இதில் மொட்டை ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை என பலர் நடித்துள்ளனர். எம்.என்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் நாகரத்தினம் தயாரித்துள்ள இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.மோகன்.
படம் பற்றி அவர் கூறும்போது, “ இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நண்பர்களுக்குள் பகைஏற்படுகிறது. அந்த பகை, அவர்களை எங்குபோய் நிறுத்துகிறது என்பது படம். இதற்கிடையில் காதலும் இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.