அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள படம், ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த மாதம் 21-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு வெளி நாடுகளிலும் வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் இருந்தே நல்ல வசூலைக் குவித்து வரும் ‘டிராகன்’, 9 நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.62 கோடியை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.