ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்தது ஏன்? - வெற்றிமாறன்

By KU BUREAU

ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். ஜீ ஸ்டூடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ''ஜி.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இதுதான் அவரின் சிறப்பான அடையாளம்.

10 ஆண்டுகாலம் இசையமைப்பாளராக பணியாற்றிய பிறகு நடிக்க வேண்டும் என்று விரும்பினார். ‘இசை பணி நன்றாகத் தானே சென்று கொண்டிருக்கிறது? எதற்கு திடீரென்று நடிப்பு? என்று கேட்டேன். ஒரே அறையில் இருந்து பணியாற்றுவது சோர்வை தருகிறது. வெளியில் வந்து பணி செய்ய விரும்புகிறேன்’ என்றார்.

அவர் நடிக்க வந்த பிறகு அவருடைய இசை திறமை மேலும் விரிவடைந்தது. அவர் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார். இந்தப் படத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இசை அமைப்பாளராகவும் வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்துகள்” என்றார். விழாவில் இயக்குநர்கள் சுதா கொங்கரா, அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE