நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: பிளஸ், மைனஸ் என்னென்ன?

By ப்ரியன்

தனுஷ் இயக்கத்தில் இளம் நடிகர்களின் அணிவகுப்பில் வெளிவந்துள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ப்ளஸ், மைனஸ் விமர்சனம் இது...

2கே கிட்ஸ் வாழ்வியல் பின்னணியில் காதல், பிரேக்கப், திருமணம் சார்ந்த கதையும் களமும் ப்ளஸ் தான் என்றாலும், ட்ரெய்லர் பார்த்து வியந்த துடிப்பான அம்சங்கள் பல இடங்களிலும் இல்லாதது மைனஸ்.

சிம்பிளான கதையைத் தெரிவு செய்தது ப்ளஸ்தான் என்றாலும், அந்தக் கதையோடு ரசிகர்கள் ஒன்றிடச் செய்யத்தக்க எமோஷனல் கனெக்ட் இல்லாதது மைனஸ்.

லியான் பிரிட்டோவின் அசத்தலான ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் துள்ளலான இசையும், தரமான தொழில்நுட்ப அம்சங்களும் பாசிட்டிவ் ரகம் என்றால், பெரிதாக எங்கேஜ் செய்யாத திரைக்கதை முக்கிய மைனஸ்.

அவ்வப்போது மேத்யூ தாமஸ் தெறிக்கவிடும் கவுன்ட்டர்களால் எங்கேஜிங் தன்மை சற்றே கூட்டப்படுவது ப்ளஸ்தான். அதேபோல், சில இடங்களில் காமெடி காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது என்றாலும், படம் முழுக்க பல கதாபாத்திரங்கள் மப்பும் மந்தாரமுமாக திரிவது சரியாக ஒட்டாதது மைனஸ்.

தனுஷை நினைவூட்டும் வகையிலான நடிப்புடன் நாயகன் பவிஷ் வலம் வருவதும், நாயகி அனிகா சுரேந்திரன் கவனம் ஈர்க்கும் நடிப்பை வழங்கத் தவறியதும்,
ப்ரியா பிரகாஷ் வாரியரின் இருப்பும் பெரிதாக ஈர்க்காததும் மைனஸ். அதேவேளையில்,ஹீரோவின் நண்பராக மேத்யூ தாமஸ் ஸ்கோர் செய்வது, சரத்குமாரின் அழுத்தமான பிரசன்ஸ், ரம்யா ரங்கநாதனின் வரவும் அட்டகாசமான ப்ளஸ்.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு மிக முக்கியமான ப்ளஸ். ஆனால், கதாபாத்திர உருவாக்கத்தில் நேர்த்தி இல்லாததும், திரைக்கதையில் சுவாரஸ்யாம் கூட்டாததும் மைனஸ்.

ஒட்டுமொத்தமாக, 2கே கிட்ஸ் வாழ்வியல் வழியாக காதலும் காதல் நிமித்தமுமான திரை அனுபவத்தை எதிர்பார்த்துச் செல்வோருக்கு ‘வழக்கமான ஒரு காதல்’ கதையை தனுஷ் சொல்லி அனுப்பியது ஏமாற்றமே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE