சென்னை: நடிகர் கருணாஸ் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை குடும்பத்தோடு சந்தித்தார்.
முக்குலத்தோர் புலிப்புடைக் கட்சியின் தலைவரும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், திரைப்பட நடிகருமான கருணாஸின் பிறந்த நாளையொட்டி (21.02.2025) இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும், பிறந்த நாள் நினைவுப் பரிசுகளையும் நடிகர் கருணாஸுக்கு வழங்கி தனது மகிழ்வை வெளிப்படுத்தினார். இச்சந்திப்பில் கருணாஸின் மனைவி திரைப்படப் பாடகி கிரேஸ் கருணாஸ், அவர்களது மகன் நடிகர் கென் கருணாஸ், கருணாஸின் மருமகன் ருத்விக் ஆகியோரும் கலந்து கொண்டு முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றனர்.